மகிந்த- சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாகின்றன!
ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) செயற்படுத்துவதை வலுப்படுத்த கொழும்பு 7 இல் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அமைச்சரவை ஆவணத்தின் படி, ஊழல் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான நீதித்துறை திறனை விரிவுபடுத்துவது உள்ளிட்ட திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நான்கு அரசுக்குச் சொந்தமான கட்டடங்களை மேல் நீதிமன்ற வளாகங்களாக உடனடியாகப் பயன்படுத்த நீதி அமைச்சகத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம பயன்படுத்திய இல. B 88 கிரகெரி வீதி, கொழும்பு 7 என்ற முகவரியில் உள்ள இல்லம், மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இல்லம் (இல. C 76), முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய விஜேராம மாவத்தையில் உள்ள இல்லம் (இல. B 108) மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். சம்பந்தன் பயன்படுத்திய ஸ்டான்மோர் சந்திரவங்கய வீதியில் உள்ள இல்லம் (இல. B 12) ஆகிய நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களும் மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையானது நீதிமன்றங்களுக்கான இடவசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |