பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினர்
முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் நண்பகலளவில் அரை மணிநேரம் முன்னெடுக்கப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், இந்த காலத்தில் மேலதிக நேர விசேட கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல், சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 44 தொழிற்சங்கங்கள் இணைந்து 6 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் 27ஆம் திகதி 5 மணிநேரம் பணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
