நந்தன குணதிலக்கவுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம்
ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கியஸ்தர் நந்தன குணதிலக்கவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர தீர்மானித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் உயர்நீதிமன்ற நீதிபதியுமாகிய ரங்க திசாநாயக்க, ஜே.வி.பி.யின் சட்டப்பிரிவில் தனக்குக் கீழ் பணியாற்றியதாக நந்தன குணதிலக்க அண்மையில் பரபரப்பான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் குறித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று ஜே.வி.பி.யின் சட்டப்பிரிவின் செயலாளர் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
வழக்கு
இந்நிலையில் நந்தன குணதிலக்கவின் கருத்துக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க விரைவில் வழக்குத் தொடரவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நந்தன குணதிலக்கவின் கருத்து மூலம் தனக்கு அசௌகரியம் மற்றும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியே அவர் வழக்குத் தொடர உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



