கொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்
கொவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை இலவசமாக தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், கட்டணம் அறவிட தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
கொவிட் சடலங்களை தகனம் செய்யும் போது, அந்த குடும்பங்களிடம் பணம் அறிவிட, தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றின் போது வருமானம் குறைந்த பிரதேச சபையாக இவ்வாறு பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதேச சபையின் தலைவர் சுதத் தேஷபிரியகே தலைமையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையில் இடம்பெற்ற 14 கொவிட் மரணங்களில் 9 மரணங்களை தகனம் செய்வதற்கு எவ்வித பணமும் அறவிடப்படவில்லை என பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
1800க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அதிகமானோர் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri