நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானம்
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி, நாடாளுமன்றில் வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் சம்பிரதாய ஆரம்பம் பெப்ரவரி 7ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தற்போதைய 16வது நாடாளுமன்றத்தின் கடைசி சம்பிரதாய ஆரம்ப நிகழ்வு இதுவாகவே இருக்கும். அடுத்த ஆரம்பம் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்கைப் பிரகடனம்
இந்தநிலையில் கடந்த வருடங்களைப் போலன்றி, ஜனாதிபதி விக்ரமசிங்க சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் எனவும் ஆயுதப்படை பொலிஸ் அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக மாத்திரமே கலந்துகொள்வார் என குறிப்பிடப்படுகிறது.
மாறாக, நாடாளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்த பிறகு அவர் வெளியிடும் கொள்கைப் பிரகடனம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் உரையாக இருக்கும் என்பதோடு இது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார மீட்சிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும், அதை நோக்கி அவர் எடுத்த நடவடிக்கைகளும் அவரது உரையின் மையப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
