இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானம்

Government Protest Batticaloa Teachers
By Kumar Jul 09, 2021 12:55 PM GMT
Report

அரசாங்கத்தின் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாகக் காணப்படுகின்ற அடக்குமுறையான செயற்பாடுகளைக் கண்டித்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமது பொதுச் செயலாளர் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


ஆனால் இன்று மீண்டும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இது சுயாதீன நீதிச் சேவையினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விடயமாகும்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதற்குப் பின்பும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தியிருப்பதென்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். சுயாதீன ஆசிரியர் சேவைகள் சங்கம் சுயாதீன நீதிச் சேவையை வலியுறுத்தி முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீயானி பண்டாரநாயக்கா அம்மையார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டின் பல பாகங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

மாணவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குரல்கொடுத்து வந்திருக்கின்றது. இந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்தை நியாயப்படுத்தியே எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

கடந்த காலங்களில் சடஸ்கோர்க்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தமையின் நிமித்தம் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

சுயாதீன கல்விக் கொள்கையில் இலவசக் கல்வியை நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டில் இலவச சுகாதாரம், இலவசக் கல்வி என்பன மிக முக்கிய பங்குகளாகும். இலவச சுகாதாரம் எமது நாட்டில் இருந்தமையினாலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய கோவிட் சூழ்நிலையில் பல உயிர்களைக் காக்கக் கூடியதாக இருந்தது.

ஆனால் தற்போது இலவச சுகாதாரம் மற்றும் கல்வி என்பன அச்சுறுத்தலுக்குள்ளாகப்பட்டுள்ளன. எமது பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தனிமைப்படுத்தல் சட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதானது, இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயற்பாடாகும்.

இலங்கையில் இறையாண்மைக்கு இந்த சம்பவம் ஒரு சவாலாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஊடகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு எமது கருத்துச் சுதந்திரங்களும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. தற்போது ஜோன் கொத்தலாவல கல்வி நிலையத்தை ஒரு தனியார் கல்வி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஏற்கனவே கடந்த காலங்களில் சைட்டம் என்ற தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சுயாதீன கல்வியை வலியுறுத்துவதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கம் சேர்ந்து பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்தமையினால் அது கைவிடப்பட்டது.

தற்போது நேற்யை தினம் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 982மாணவர்கள் குறிப்பிட்ட காலங்களில் 05-09-2009ல் இருந்து 15-05-2017 வரையும் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் அங்கு கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படுகின்றார்கள்.

எனவே இங்கு அந்த மாணவர்கள் இணைக்கப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இலவச சுகாதார சேவை மற்றும் கல்விச் சேவைக்கும் சவாலாக அமையும் என்பதாலேயே எமது பொதுச் செயலாளர் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலவசக் கல்வியைத் தொடர்ந்து கல்விக் கொள்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எமது கல்வி அமைச்சருக்கு உள்ளது. அவரும் ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில் கல்வி உயர்கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராவார்.

ஆனால் தற்போதைய விடயங்களில் அவர் மௌனமாக இருப்பதையிட்டு நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 1981ம் அண்டு கொத்தலாவல பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அங்கு 2020-2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைப்பது தொடர்பில் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட பாடநெறிகளே சுற்று நிருபத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆனால் மருத்துவ பிரிவிற்குட்பட்ட பாடநெறிகள் உள்ளடக்கப்படவில்லை. தற்போது நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மருத்துவத் துறையைiயும் உள்ளடக்கியதாக பாடவிதானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் தடுக்கப்பட்ட சைட்டத்தின் பெரும்பாலான மாணவர்களை இணைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது இலவசக் கல்விக்குப் பெரும் சவாலான விடயமாகும்.

இதே போன்று ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கும் இது ஒரு அடிகோளாக இருக்கும் விடயமாகும் என்பதற்காகவே இதனை நாங்கள் எதிர்த்துப் போராட்டங்கள் நடாத்துகின்றோம். எனவே இந்த அரசு இதற்குப் பொறுப்புக் கூறுவதோடு உடனடியாக தனிமைப்படுத்தல் சட்டம் மூலம் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் எமது தோழர்களை விடுவிக்க வேண்டும்.

எங்கள் குரல்களை ஒடுக்க முற்படின் சிறந்த கல்வியாளர்களும், கல்விமான்களும் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும். கல்விப்புலத்தில் உள்ளவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களுக்கு எதிரான நாங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் முன்னெடுத்துவந்த இணையவழி கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

இது தொடர்பான தீர்மானத்தினை மத்திய குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது. இலவச கல்வியை மாணவர்களுக்குக் கொண்டுசெல்லவேண்டிய காலகட்டத்தில் இந்த அரசாங்கத்தின் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாகக் காணப்படுகின்ற அடக்குமுறையான செயற்பாடுகளைக் கண்டித்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளோம் ஏற்காத தெரிவித்துள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US