நாடாளுமன்ற உறுப்பினர் கைது - பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
யாழில் கடந்த 23ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கைது செய்யபட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சபை அமர்வில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வமர்வு நேற்று(28) காலை தவிசாளர் அ.தவக்குமாரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமாரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் குறிப்பிடுகையில்,
இறந்த ஒரு தமிழ் மகனுக்குச் சுடர் ஏற்றப்போகின்றார் என்பதற்காகத்தான் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தார்கள் என கோவிட் தடுப்பு நடவடிக்கை என்று பொலிஸார் சொல்லியுள்ளார்கள். அதேநாளில் கிழக்கு மாகாணத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் மைதானம் திறந்து வைத்தனர்.
அது மாத்திரம் அல்ல இங்கு சாராய கடைகள் திறக்கப்பட்டு அங்கு நிறைய மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அதற்கு கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் பயன்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கும் கைது செய்த விதத்தினையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இலங்கை அரசின் சட்டம் தமிழ்பேசுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் நடக்கின்றது. இனரீதியான பாகுபாடு பார்க்கப்படுகின்றது. இங்கு நடந்த குற்றங்கள் அனைத்திற்கும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று முன்வைப்பதற்குக் காரணம் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குச் சட்டங்களைப் பயன்படுத்தி இந்த அரசாங்கம் எங்களை நசுக்குகின்றது. ஒடுக்குகின்றது. இந்த விடயத்தினை கண்டன தீர்மானமாக அவர் கொண்டுவந்துள்ளார்.
இதன் போது கண்டன உரைகளையும் தீர்மானத்திற்கான ஆதரவினையும் பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந், பிரதேச சபை உறுப்பினர்களான செ.பிரேமகாந், எஸ்.குகநேசன் ஆகியோர் கண்டனங்களை வெளியிட்டு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இருவர் சபையில் இல்லாத நிலையில் ஒருவர் பிரேரணையிலிருந்து விலகிக்கொண்டுள்ளதுடன்
19 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
