தாதியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்
கோவிட்-19 சிகிச்சைகளில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
கோவிட்-19 சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நாளைய தினம் தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை முதல் நாளை மறுதினம் வரையில் சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.