மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனுவை பரிசீலனைக்கு எடுக்கவுள்ள உயர் நீதிமன்றம்
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைக்கால தடை உத்தரவு
மேலும், இந்த மனு நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று(22.01.2024) அழைக்கப்பட்டபோதே விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியில் இருந்து நீக்குமாறும் அவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri