மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு அனைத்து வர்த்தகர்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய மாவட்டத்தின் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 29ஆம் திகதி வரையில் வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் மு.செல்வராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக மையத்தில் இன்று மட்டக்களப்பு வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தகர்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.
அத்தியாவசிய நடவடிக்கைகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தமது சேவையினை மட்டுப்படுத்திய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்க முடியும். வர்த்தகர்கள் எடுத்துள்ள இந்த முடிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மூலம் கோவிட் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதன் காரணமாகவே சமூகத்தின் நலன் கருதியும் வர்த்தகர்களின் நலன் கருதியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு வர்த்தகர்களுக்கும் உள்ளது. அதனடிப்படையில் அனைத்து வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி பொதுமக்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
கோவிட் தொற்றிலிருந்து மட்டக்களப்பு மக்களைப் பாதுகாக்கவேண்டியது எங்களது அனைவரது கடமையாகும். சில வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
பலசரக்கு கடை, வெதுப்பகங்கள் விற்பதற்கு மட்டுமே திறக்கப்படும். ஹோட்ல்களும் சாப்பாடு எடுத்துச்செல்லல் மட்டும் முன்னெடுக்க முடியும். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பழக்கடைகள், மருந்துவிற்பனை நிலையங்கள் திறப்பதற்கான அனுமதியுண்டு.
அதேபோன்று உங்கள் வீடுகளிலிருந்து ஒருவரை மட்டும் வெளியில் அனுப்பி அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
