ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு
ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்கை நெறி நிலையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பதவி விலகலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கடந்த 5 வருடங்களாக கட்சிக்காக செயற்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கட்சி சார்பில் போட்டியிட்டோம் இதன் போது போனஸ் ஆசனமாக இரண்டு ஆசனம் கிடைத்தது.
இரண்டு ஆசனங்கள்
இந்த இரண்டு ஆசனங்கள் மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முஸ்லீம் பெண் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்ற நிலையில் ஒரு வருடத்துக்கு ஒருவர் என மாற்றி ஆசன ஒதுக்கீட்டை செய்யுமாறு கட்சியிடம் கோரினோம். கட்சி அதனை செவிமடுக்க வில்லை.
இந்த நிலையில் மாநகர சபை தேர்தலில் 98 வீதம் தமிழ் வாக்குகளை பெற்று கொடுத்த நிலையில் எங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு முஸ்லீம் பெண் ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்குவதை வாக்களித்த தமிழ் மக்கள் மிக கேவலமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
பதவி விலகல்
இது தொடர்பாக கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.ஆனால் அவர்கள் அதற்கான தீர்வை தரவில்லை.
எனவே இவ்வாறு தீர்வை வழங்காத நிலையில் கட்சியில் இருந்து நானும் மகளீர் அணி செயலாளரும் பதவி விலகுவதாக தீர்மானம் எடுத்து அதற்கான கடிதத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
