அவிசாவளையில் பேருந்து ஒன்றை தீ வைத்து எரித்த மக்கள்
பேருந்து ஒன்றில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் குறித்த பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் இவ்வாறு குறித்த பேருந்தை பிரதேசவாசிகள் தீ வைத்து, தீக்கிரையாக்கியுள்ளனர்.
பேருந்தில், மோதுண்டு, சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பேருந்திற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலையில் பணிப் புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ள இந்த விபத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து, பேருந்து சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிசாவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து, பேருந்து தமது பொறுப்பிற்கு எடுக்க பொலிஸார் முயற்சித்த தருணத்திலேயே, பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மையினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri