கிளிநொச்சியில் மீள்குடியேறும் குடும்பங்கள் : ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது எழுபது வரையான குடும்பங்கள் தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தினுடைய மீள் குடியேற்றம் தொடர்பில் இன்று (23-11-2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் கண்ணிடி அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.
கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம்
இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னராக மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இதுவரை ஐம்பதாயிரத்து 29 குடும்பகள் மீள்குடியேறியுள்ளன. தற்போது பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலே கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரதேசங்களிலே மீள்குடியேறுவதற்காக இதுவரை 65 வரையான குடும்பங்கள் தங்களுடைய பதிவுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களும் சொந்தக காணிகளில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
