கிளிநொச்சியில் கல்வி சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விசேட ஆராய்வு(Photos)
கிளிநொச்சி சிவபாத கலையகம் பாடசாலைக்கு செல்லும் வீதியில் பாதுகாப்பான தொடருந்து கடவை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கிளிநொச்சி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(16) இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை கல்விச்சமூக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர்புற பாடசாலையான சிவபாத கலையகம் மற்றும் அரசினர் தமிழக்கலவன் ஆகிய பாடசாலைகளில் 400க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவை புனரமைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள செல்வபுரம், இந்துபுரம் ஆகிய கிராமங்களில் இருந்தும் இந்த இரு பாடசாலைகளுக்கும் மாணவர்கள் சென்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ9 வீதியிலிருந்து குறித்த பாடசாலைகளுக்கு செல்லும் போது மாணவர்கள் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடந்து சென்று வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை முதல்வரினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான நடவடிக்கையை எடுத்து தருமாறும் அவர் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
தொடருந்து கடவையை அமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் வடக்கு மாகாண அலுவலகம் தயாராக இருக்கும் நிலையில், அதற்கான அனுமதியை வழங்க திணைக்களம் மறுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவ்விடயத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு சாதகமான தீர்வு பெற்று தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சரின் உறுதிமொழி
இதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைானத்திற்கு செல்லும் வீதியானது, இராணுவ முகாமிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் மாணவர்கள் ஏ9 வீதி ஊடாக சென்று விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுக்கின்றது.
அது பாதுகாப்பற்றது என்ற விடயம் தொடர்பிலும் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
இதன்போது குறித்த விடயம் இலகுவானது எனவும், அதனை மாணவர் பாவனைக்காக விடுவிப்பதற்கான
நடவடிக்கையை உடன் மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விளக்கமாக எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்,
கிளிநொச்சி வடக்கு, தெற்கு கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் மற்றும்
அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
