இலங்கையின் CTUR சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு

Kilinochchi Northern Province of Sri Lanka
By Erimalai Jun 26, 2024 03:12 PM GMT
Report

உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவும் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையில் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தினை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்கான கலந்துரையாடல்கள் இன்று(26) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை

மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையின் CTUR சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு | Research In Kilinochchi On Sri Lanka S Ctur Act

1983 – 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இலங்கையின் CTUR சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு | Research In Kilinochchi On Sri Lanka S Ctur Act

அவற்றில் ஒரு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அடுத்த கலந்துரையாடல் இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

மூன்றாவது வது கலந்துரையாடல்

மூன்றாவது வது கலந்துரையாடல் அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இலங்கையின் CTUR சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு | Research In Kilinochchi On Sri Lanka S Ctur Act

நான்காவது கலந்துரையாடல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், முன்னாள் போராளிகள், அங்கவீனமுற்றோர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் CTUR சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு | Research In Kilinochchi On Sri Lanka S Ctur Act

மேலும், இக்கலந்துரையாடலில் இணைந்திருந்த நபர்கள் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் முன்வைப்பதற்கான வழிவகை தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.

இந்த சந்திப்புக்களில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி(கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராசா மற்றும் ஆசிப் போர்ட், இணைப்பாளர் சரத் கொத்தலாவல, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி(சட்டங்கள்) வை.எல். லொக்குநாரங்கொட, நிறைவேற்று அதிகாரி(பொது உறவுகள்) சௌமியா விக்ரமசிங்க மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US