கிளிநொச்சியில் இராணுவ சீடையுடன் மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,இது தொடர்பில் குறித்த பகுதி சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அப்பகுதியில் பாதுகாப்பு அணைக்கட்டு காணப்படும் நிலையில், அந்த அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அகழ்வுப்பணிகளை நாளை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri