மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு(Photos)
புத்தளம் ஆனமடுவ கொதலகெமியாவ பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (22.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
உயிரிழந்த காட்டு யானைக்கு மிருக வைத்தியர் இசுரு என்பவரினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானைக்கு 30 வயது எனவும் 8 அடி உயரம் எனவும் மதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை உயிரிழந்தமைத் தொடர்பில் குறித்த காணி உரிமையாளரை கைது செய்து, ஆனமடுவ நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை
முன்னெடுக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










