கருவலகஸ்வெவ பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த யானை மீட்பு (PHOTOS)
புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த யானை பெகோ இயந்திரத்தின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டு சரணாலயத்திற்குள் விடப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மஹகோன்வெவ பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற முறையில் வெட்டப்பட்ட கிணற்றினுள் விழுந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் கருவகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குச் சென்று கிணற்றுக்குள் விழுந்த யானையை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பெக்கோ இயந்திர உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த யானையை கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்டு பின்னர் தப்போவ சரணாலயத்திற்குள் விட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.




கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri