யாழில் இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட இளைஞன் மீட்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கடத்தபட்ட இளைஞன் ஒருவர் நேற்று(29) மாலை கைகள் கட்டபட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
யாழ். புத்தூர் மேற்கு, நவகரி பகுதியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் (வயது 30) என்ற இளைஞரே இவ்வாறு மீட்கபட்டுள்ளார்.
நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் நேற்று மாலை மீட்கப்பட்ட இளைஞன் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டு இருந்த வேளை அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் அவரை தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனிடம், சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
