பேருவளையில் கழிவுகளை அகற்ற கோரிக்கை
பேருவளையில் தொடரும் கழிவகற்றும் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாரு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு (Dinesh Gunawardena) நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம் மூலம் பேருவளை நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் அவர் விடுத்துள்ளார்.
மேலும் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"பேருவளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் பல வருட காலமாக பேருவளை, மருதானை, வத்திமிராஜபுர கிராமத்தில் உள்ள காணியில் கொட்டப்படுகின்றன.
சிரமத்தில் மக்கள்
இதனால், அப்பகுதியில் வாழுகின்ற சுமார் 400இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன.

அதேவேளை, இக்கிராமத்தை அண்மித்துள்ள மொரகல்ல சுற்றுலாப் பகுதியும் துர்நாற்றம் மற்றும் ஈக்கள் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடலுக்கு செல்லும் கால்வாய் அடைபட்டுள்ளதோடு இதனால், சிறிய மழை பெய்தாலும் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
நோய் அபாயம்
கழிவுகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் வசிக்க முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஈக்கள் அதிக எண்ணிக்கையில் பெருகுவதால் வீடுகளில் உணவு சமைத்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வாந்திபேதி போன்ற நோய்கள் பரவி வருகின்றன.
அது மாத்திரமன்றி, நுளம்பு பெருகி டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதுடன் தோல் நோய்கள் பொதுவாக காணப்படுகின்றன.
எனவே இவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam