பசிலிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
வெளிப்படுத்தப்படாத வருமானத்திற்கான முன்மொழியப்பட்ட வரி மன்னிப்புக்கான காலத்தை குறைக்குமாறு, உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் கோரியுள்ளனர்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வரி மன்னிப்பு காலத்தின்போது அரசாங்கம் 300 பில்லியன் வரை வருவாயை இழக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இறைவரி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
வருமான வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி திகதியை செலுத்தாததற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு பதிலாக, வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் 2018/19 மற்றும் 2019/20 காலத்துக்கு வழங்கப்படும் சலுகையை நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் முன்மொழிந்தனர்.
அத்துடன் இந்த பொது மன்னிப்பு யோசனை, முறையாக வரி செலுத்துவோருக்கு பிழையான செய்தியை கொண்டுபோய் சேர்க்கும் வேண்டும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் உத்தேச யோசனை தொடர்பில் அமைச்சருடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த யோசனைக்கு எதிராக எதிக்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானதை, ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.