பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நுகர்வோர் குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.
மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்களின் நீர் நுகர்வு அதிகமாக இருப்பதாலும், குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளதாலும், அனைவருக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்பதாலும், துவைத்தல், தோட்டம் அமைத்தல் மற்றும் அத்தியாவசிய தேவையற்ற பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
