பயணத்தடையை இந்த மாத இறுதிவரை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயண கட்டுப்பாட்டினை இந்த மாத இறுதி வரை அமுல்படுத்துமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சங்கத்தின் அதிகாரிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாட்டினால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்ட்டுள்ளது. எப்படியிருப்பினும் பயணத்தடையை நீக்கினால் தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்களை குறைப்பதற்கு பயண தடையை மிகவும் கடுமையாக அமுல்படுத்த வேண்டும். பயண கட்டுப்பாட்டு காலப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அருகில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் தீவிரமடைந்துள்ள நாடுகளில் இருந்தும், மாறுபாடுகள் அடையாளம் காணப்படும் நாடுகளில் இருந்தும் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட கூடாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூகத்திற்குள் கொவிட் பரவல் தொடர்பில் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்காக PCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri