சிறப்பான வீதிகளை உருவாக்குமாறு அஞ்சன பிரியஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை
திறமையான சாரதிகளை உருவாக்குவதற்கு முன்னர் சிறப்பான வீதிகளை உருவாக்குமாறு அரசாங்கத்திடமும் பொலிஸாரிடம் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(22.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்வைத்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறப்பான வீதிகள் இல்லாமல் திறமையான சாரதிகளை உருவாக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்ட நடவடிக்கை
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளின் மகன்கள் போன்றோர் குடிபோதையில் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனினும் அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதேநேரம் கொழும்பு மாநகரில் சிறுசிறு விபத்துக்களில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களால் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் பொறுப்பான பேருந்து சங்கம் என்ற வகையில் இந்த அரசு வரி, அபராதத்தில் இயங்குகிறது. எனவேதான், அரசாங்கம் இந்த வகையான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது.
பேருந்து முன்னுரிமைப் பாதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, எனினும் அது மிகக் குறுகிய காலத்தில் நிறுத்தப்பட்டது.
இதேவேளை போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதத் தாள்களை அனுப்பும் சிறப்புத் திட்டத்தை பொலிஸ் தொடங்கினால், நாளை காலை முதல் மக்கள் தங்கள் கடமைகளுக்கு சரியான நேரத்தில் வருவதற்கு பேருந்துகள் சேவைகளில் ஈடுபடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
