அம்பாறையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை
டித்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் இக்குப்பைகள் சுழற்சி முறையில் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
அத்துடன் டித்வா புயல் காரணமாக கரையை நோக்கி இழுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்ட படகுகள், தோணிகள் என்பன இன்னும் பொதுமக்கள் பயணம் செய்யும் பாதைகளை ஆக்கிரமித்துள்ளன.
போக்குவரத்திற்கு இடையூறு
இவ்வாறு ஆக்கிரமித்துள்ள படகு தோணி உரிமையாளர்கள் படிப்படியாக குறித்த படகுகள் தோணிகளை அகற்றி வருகின்றனர்.
எனினும் அந்தப் பகுதியில் இடம்பெறும் மண் அரிப்பின் காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் மீண்டும் தங்கள் படகு தோணிகளை பிரதான பாதைகளின் இரு மருங்கிலும் வைத்து வருகின்றனர்.

இவை தவிர பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை கடற்கரை ஓர வீதி பகுதியில் எவ்வித அனுமதி இன்றியும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில கடற்றொழிலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
வேண்டுகோள்
பிரதான சந்திகள் மற்றும் மக்கள் செல்கின்ற பாதைகளை ஆக்கிரமித்து மோட்டார் வாகனம் திருத்துமிடம் மீன் விற்பனை நிலையங்களை அமைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பொதுப்போக்குவரத்து தடைப்படுவதுடன் அண்மைக்காலமாக விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இப்பகுதிகளில் எவ்வித அனுமதி இன்றி மேற்கொள்வதனால் பொதுப்போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri