கண்டியில் 400 குடும்பங்கள் இன்னும் இருளில்:ஹெலிகொப்டரில் உணவு விநியோகம்
'டிட்வா' சூறாவளி வந்து சென்று ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் கண்டி மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் இன்றும் இருளிலும் வெளித் தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பதாக கண்டியிலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு நேற்று (22.12.2025) வரை மின்சாரம் கிடைக்கவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியின் தாக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.அது சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக புனரமைக்கப்பட்டு வந்த வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு டோச்கள், பேட்டரிகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

அரசு அதிகாரிகள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கால்நடையாகவே எடுத்துச் செல்வதாகவும், ஒரு டிராக்டர் செல்லக் கூடிய வகையில் வீதியை விரைவாகத் தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri