பெரும் அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவசர கோரிக்கை
இரசாயன பசளைகளுக்கு தடைவிதிக்க எடுத்த தீர்மானத்தை சில காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் (Gotabaya Rajapaksa) மிகவும் தாழ்மையுடன் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சரியான முறைகளை உருவாக்கியதும் இயற்கை பசளை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.
குருணாகலில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால், பெரிய அழிவு ஏற்படும் எனவும் தனக்கும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பசளை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்காது போல் , அது ஜனாதிபதிக்கு மாத்திரல்லாது அரசாங்கத்திற்கும் பிரச்சினையாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri