தடையை நீக்குங்கள்! - இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியன இலங்கையின் வர்த்தக இறக்குமதித் தடைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.