வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை
யாழ். வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு மேற்குலக சர்வதேச நாடுகளிடமிருந்து உதவிகளைக் கேட்டிருக்கின்றோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21.02.2023) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 'வலி. வடக்கில் மீள் குடியேறியுள்ள மக்களின் தற்போதைய நிலைமைகள்பற்றி' தெளிவுபடுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்குத் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தின் செயற்பாட்டில் சிறிது சிறிதாக மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மாவட்ட செயலகத்திற்கு சில இடர்பாடுகள் இருக்கின்றது. முகாம்களில் இருக்கின்றவர்களை தற்போது குடியேற்றம் செய்துவருகின்றோம்.
இராணுவத்தினர் வெளியேற்றம்
சொந்த காணிகளுக்கு உரியவர்கள் இன்னும் முழுமையாகக் கையேற்று உரிய பார்வைக்குட்படுத்தினால் தான் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும்.
அந்தக் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லுகின்றபோது அங்கு இருந்த கட்டிடங்களை விட்டுச் செல்கின்றனர்.
காணியின் உரியவர்கள் அங்குப் போகாத காரணத்தினால் இராணுவத்தினரால் நீக்கப்பட்ட தன் காரணமாக அப்போது பிரச்சினை, இப்போது இல்லை.
சட்டவிரோதமான செயல்கள் இடம்பெறுவதாகவும் அதில் உள்ள பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கவிட்ட காணிகளை வந்து பார்த்துட்டு போவதை விடுத்துக் காணி முறையாகப்பயன்படுத்துவது தங்களுடைய உடைமைகளை உரிமைகோருவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்தால் தான் தொடர்ந்து செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
மீள் குடியேறியவர்களுக்கு முப்பத்தெட்டாயிரம் ரூபா பணமும் (38000)
வழங்கப்படும். அதற்கான நிதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்குல சர்வதேச
நாடுகளிடமிருந்து உதவிகளைக் கேட்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
