மாதிவெல எம்.பி வீடுகளுக்கு ஏசி பொருத்துமாறு கோரிக்கை
மாதிவலையில் அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களில் குளிரூட்டி பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டிகளை கூடிய விரைவில் பொருத்தி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அண்மையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
நடைபெறும் புனரமைப்பு வேலைகள்
மாதிவலையில் அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்கள் 112 காணப்படுவதாகவும் அதில் 70 க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தங்கி இருக்கின்றனர்.

தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் டையில் பிடிப்பதோடு திரைச்சீலைகள் போட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கங்கள் நிலவிய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்த பணத்தில் குளிரூட்டிகளை பொருத்தி பாவித்துள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது.