அரச புலனாய்வு சேவைகளின் அறிவுறுத்தலில் செயற்படும் ஜனாதிபதி
நிபுணர்களின் கருத்துக்கு செவிசாய்க்காததால் முடக்கலை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை கோருவது அபத்தமான நடைமுறையாகும்.
எனவே பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக சுய முடக்கத்திற்கு செல்லுமாறு ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரசப்பணியாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தமது உயிர்களை மதித்து அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அனுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஆட்சியாளரின் அறியாமை முடிவுகளுக்கு பொதுமக்கள் இரையாகிவிடக்கூடாது. ஆட்சியாளர் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காவிட்டால், தம்முடைய பாதுகாப்பை தாமே உறுதி செய்ய வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க கேட்டுள்ளார்.
பொது சுகாதார அதிகாரிகளும் ஏற்கனவே சுயமுடக்கத்துக்கு செல்லுமாறு பொதுமக்களை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் தீவிரத்தன்மை காரணமாக பல நகரங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச புலனாய்வு சேவைகளின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளை புறக்கணிப்பதாகவும் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தினர் மற்றும் உள்ளூர் மருத்துவ நிபுணர்கள், மற்றும் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உட்பட்ட அனைவரும் உடனடி நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி அரசப் புலனாய்வு சேவைகளின் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்படுகின்றார் என அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.