திங்கட்கிழமை முதல் சுயமாக விதிக்கப்பட்ட முடக்கலுக்கு செல்லுமாறு கோரிக்கை
கோவிட் பரவுவதைத் தடுக்க அடுத்த திங்கட்கிழமை முதல் சுயமாக விதிக்கப்பட்ட முடக்கலுக்கு செல்லுமாறு, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
டெல்டா மிகவும் மாறுபட்ட தொற்று நோய் காரணமாக நாடு ஒரு பேரழிவு சூழ்நிலையில் மூழ்கி இருக்கும் இதுபோன்ற தருணத்தில் அரசாங்கம் முடக்கலை அறிவிக்காமையால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட சூழலில் இருந்து வெளியே வருவதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், களத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அவர்களே பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது, ஆலோசனையையும் மருத்துவ நிபுணர்களின் கருத்தையும், அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிப்பதால் கட்டுப்பாடுகள் அல்லது முடக்கலை விதிக்க, இனி அரசாங்கத்தை வலியுறுத்த போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு அதைத் தொடருமாறு, தாம் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி வார இறுதி நாட்களில் அடுத்த ஏழு நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சேகரித்துக்கொள்ளலாம் என்று உபுல் ரோஹன கேட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கோவிட் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்பது உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




