அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டுள்ள அமைச்சரவையின் அனுமதி
முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அடையாளம் காணப்பட்ட மொத்த பொது சேவை வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து முந்நூற்று இருபத்து நான்கு ஆகும்.
அமைச்சரவைக்கு பரிந்துரை
ஆனால் அறுபத்து ஏழாயிரத்து எழுநூற்று எட்டு வெற்றிடங்கள் மிகவும் அத்தியாவசியமான வெற்றிடங்களாக முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவை என சம்பந்தப்பட்ட குழு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வரம்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் கட்டுப்படியாகாத எண்ணிக்கையிலான மக்கள் அரச சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் அந்த குழுவிற்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு ஏற்ற வகையில் எந்தவொரு பங்களிப்பும் அவர்கள் பெறுவதில்லை எனவும் சம்பந்தப்பட்ட குழு வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |