ஊரடங்கு உத்தரவினை ஒக்டோபர் மாதம் வரை நீடிக்குமாறு கோரிக்கை
நாடு முழுமையாக முடக்கப்படுவதன் முழு பலன்களையும் பெற வேண்டுமெனில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி அல்லது ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையிலாவது நீடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர், அஸ்ட்ராசெனெகா மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற, நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டு குறைந்தது 28 நாட்களுக்குப் பிறகு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
