அரிசி வழங்குமாறு பங்களாதேஷிடம் கோரிக்கை
பங்களாதேஷிடம் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தக வாணிப அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷத்தின் இலங்கைக்கான தூதுவர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கு இடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளன.
உணவு பஞ்சம்

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக் கூடிய அரிசித தட்டுப்பாடு மற்றும் உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி வழங்குமாறு பங்களாதேஷிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதகமான பதில்

அது தொடர்பில் சாதகமாக பதிலளித்துள்ள இலங்கைக்கான வங்காளதேசத் தூதுவர் ஆரிபுல் இஸ்லாம், இலங்கையர்களுக்கு பங்களாதேஷத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் போது வர்த்தக, வாணிப அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகாரவும் கலந்து கொண்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam