வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை
சுகாதார பிரிவினர் நாளைய தினம் வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியத்தேவை இன்றி வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார பிரிவினர் நாளையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளைய தினம் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் அவசியமாகச் சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருவதுடன், ஏனையவர்கள் வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam
