திருகோணமலை-கொழும்புக்கான இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க கோரிக்கை
திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர தொடருந்து சேவையை மீண்டும் மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான பகல் நேர சேவை சேவையில் இருந்தாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிக்கின்றனர்.
இரவு நேர சேவை
உள் நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு சேவையில் பயணிக்கின்றனர்.

இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.
தொடருந்து திணைக்களம் இவ்வாறானவற்றை கொண்டு இரவு நேர தொடருந்து சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri