இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை
இலங்கை தனது 12 பில்லியன் டொலருக்கான சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
டொலரின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட நிலையிலேயே கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கான புதிய அடையாளமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 2022 மே மாதத்தில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள்
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் இந்த வாரம், சர்வதேச இறையான்மை பத்திரப்பதிவுதாரர்களுடன் முறையான மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கை தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பின் பின்னணியில், தற்போதுள்ள பத்திரங்களை அமெரிக்க டொலர்களில் புதிய பத்திரங்களுக்கு அதே நாணயத்தில் மாற்றுவதற்கான நோக்கில் செயல்பட்டு வருகிறது" என்று நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024 ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கையின் நிதியமைச்சகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |