கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் மக்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை

Covid-19 People Trincomalee district
By Mubarak May 29, 2021 07:06 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் தமக்கு அரசினால் நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மாவட்டத்தின் கந்தளாய் பேராறு பகுதியில் வசிக்கும் மக்கள் தமது தொழில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் காரணமாக கந்தளாய் பிரதேசமும் முடக்கத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற எந்தவிதமான உதவிகளோ நிவாரண செயற்பாடுகளோ தமக்கு கிடைக்க வில்லையெனவும், அரச ஊழியர்கள் தம்மை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேராறு மக்கள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், அன்றாட கூலித்தொழில்களை மேற்கொண்டு வரும் நாம் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு பிள்ளைகளுடன் கஷ்டத்திற்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நாளாந்த கூழித்தொழிலை நம்பி வாழும் பல குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாயில் பேராற்றுவெளி,பேராறு,மத்ரஸா நகர், ரஜஎல, இரண்டாம் குலனி மற்றும் வட்டுக்கச்சி போன்ற பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்பகுதி மக்களுக்கு இது வரை எந்தவிதமான உலருணவுப் பொருட்களும் கிடைக்கவில்லையென இப்பகுதிகளில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தமது நோய்க்கான மருந்துகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும், மருந்தகங்களில் பெறுவதற்குக் கையில் பணம் இல்லையெனவும் கந்தளாய் பேராறு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உலருணவுப் பொதிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US