ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினை : விடுக்கப்பட்ட வேண்டுகோள்
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையினை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
இன்று(25.03.20260 யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஆசிரியர்களுடான கலந்துரையாடல் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இடமாற்ற கோரிக்கை தொடர்பான
பல்வேறு நோய்க்காரணங்களாலும் ஏற்கனவே கஷ்டப்பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களையும் மீண்டும் மொழிமாற்றங்களுக்கு அனுப்புவதற்கு வடமாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் தங்களுடைய இடமாற்ற கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டினை கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி இருக்கின்ற போதிலும் அவை எதனையும் பரிசீலனை செய்யாது தாம் சொல்லுவதை மாத்திரமே நீங்கள் செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்குடன் மாகாண கல்வி திணைக்களம் நடந்து கொள்வதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கா விட்டால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்னார் தீர்வு கிடைக்கும் வரை நாளையில் இருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri