மட்டக்களப்பு - முகத்துவார சூழல் கற்கை நிலையம் மற்றும் சூழலியல் பூங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு - முகத்துவாரத்தில் மக்களின் நன்மைகருதி வாவி சூழல் கற்கை நிலையம், சூழலியல் பூங்கா தொடர்பில் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த பயிற்சி நிலையம் இதுவரை பயன்படுத்தாமல் உள்ள நிலையில் அதனை ஒரு விளையாட்டு கழகம் வாடிவீடாக 15 வருடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
எனவே அதனை உடனடியாக நிறுத்தி இதற்கான ஆளணிகளை நியமித்து உரிய கற்கை நிலையம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது அமைப்புக்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் கா.முத்துலிங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டல் தாவர உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக 2002ம் ஆண்டு மிதிரிகிரியாயவில் இடம்பெற்ற கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் கூட்டத்தில், மட்டக்களப்பு பாலமீன்மடுவில் இந்த பயிற்சி நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை விடப்பட்டதையடுத்து அதற்கு அமைய குறித்த கற்கை நிலையம் மகிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நெக்டெப் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு 2010ம் ஆண்டு செப்டெம்பர் 26ம் திகதி சர்வதேச சுற்றுலா தினத்தையிட்டு திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
இதனையடுத்து இந்த கட்டடம் சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்காக மாவட்டத்திற்கு பயன் பெறுவதற்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இருந்தபோதும் அப்போது குறித்த கற்கை நிலையமும், சூழலியல் பூங்காவும் லைற்ஹவுஸ் விளையாட்டு கழகத்துக்கு ஒருவருட காலத்துக்கு 15 நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று 15 வருடங்களாகியும் இந்த அரச கட்டடத்தை குறித்த விளையாட்டு கழகம் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.





அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
