புதிய அமைச்சரவையில் இன விகிதாசாரம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய அமைச்சரவை இன விகிதாசாரத்தின் படி நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈபி.ஆர்.எல்.எப் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“புதிய அரசு மக்களின் ஆணையை பெற்று பல சதாப்தங்களுக்கு பின்னர் கூடுதலாக ஊழலுக்கு எதிராக மாற்றத்தை விரும்பியவர்கள் வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன விகிதாசாரம்
நல்ல கொள்கைகளையுள்ள நல்லாட்சி அரசு ஆட்சிய அமைக்க போகின்ற நிலையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படமால் இருக்க வேண்டுமாயின் விகிதாசார அடிப்படையில் அமைச்சுக்களை நியமிக்கப்படவேண்டும்.

அது தவறும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு நல்லாட்சியை நடைமுறைபடுத்துவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு மத்தியில் தொற்றி நிற்கும்.

எனவே, நல்ல கொள்கைகளை முன்வைக்கின்ற அடிப்படையில் இந்த புதிய அரசு 25 அமைச்சரவையில் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் 19 பெரும்பான்மை அமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam