பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் (K.Himachal) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது.
இன்று காலை முதல் பாவற்குளத்தில் நீர் வரத்தின் அதிகரிப்பு காரணமாக மாலை பாவற்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் கீழ் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற சவாலை எதிர்கொள்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளார்கள்.
அத்துடன் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முகத்தான் குளம் மற்றும் மருதமடு குளம் ஆகியனவும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே அதன் கீழ் உள்ள மக்களும் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
