விளக்கேற்றுமாறு நாட்டு மக்களுக்கு கோரிக்கை!
பரவி வருகின்ற தொற்று நோய் கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்த நோயால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்காக, நாளை மாலை 06.06க்கு பொதுமக்கள் தமது வீடுகளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டு மக்கள் அனைவரிடமும் இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்று பாரியளவில் நாடு பூராகவும் பரவியுள்ளது. இது வரையும் 440,000 நோயாளர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதோடு 9000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்ற கோவிட் தொற்றாளர்கள் குணமடைய வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கி கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், ஆசிர்வதிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் உளத்தூய்மையுடனும், ஒரே எண்ணத்துடனும், ஈடுபடுவதன் மூலம் நாட்டில் தொற்றியுள்ள, கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற அழைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.மரிக்கார்,
மனுஷ நாணாநயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan