கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் கோவிட் இனப்பெருக்கம் செய்யும் இடம்! சமன் ரத்னபிரிய
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை மூடுமாறு அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கோவிட் இனப்பெருக்கம் செய்யும் இடம் என்று சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சிகிச்சை பிரிவில் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய பதின்மூன்று செவிலியர்களில் 8 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஒரு மாதத்திற்கு முன்னரும் 25 செவிலியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த அதிதீவிர சிகிச்சை பிரிவு, சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. இங்கு முழுநேர கடமைகளைச் செய்ய கடைநிலை ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்தபோதும், அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று அவர் கூறினார்.
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam