தடுப்பூசி வழங்கப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுங்கள்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டாலும், வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் ஊடக செய்தி தொடர்பாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டவுடன், அதை ஒரே நேரத்தில் நாட்டில் விரிவுபடுத்த முடியாது, ஏனெனில் தடுப்பூசிகளை சேமிப்பதற்கான ஒரு முறை உள்ளது, தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதற்கான ஒரு முறை உள்ளது. இதனால் சுகாதார நடவடிக்கைகளை எந்த வகையிலும் தளர்த்த முடியாது. நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தது 70 வீதமான பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டால் மட்டுமே, தடுப்பூசி மூலம் குறிப்பிடத்தக்க அளவிலான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அந்த நிலையை அடைய நீண்ட நேரம் எடுக்கும்.” என அவர் கூறியுள்ளார்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri