கத்தோலிக்க சமூகத்தின் நம்பிக்கைகளை தகர்க்க வேண்டாம்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக, இனவெறி மற்றும் தீவிரவாதத்தை தூண்டுவதற்கு பல்வேறு பிரிவுகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று ஜேவிபி இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதியான விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சில பிரிவுகள் தடையாக உள்ளன. அரசாங்கத்தின் சில பிரிவுகள், கர்தினாலை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இது தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகும். சரியான திசையில் விசாரணையை வழிநடத்துவதில் இது ஒரு தடையாகும் என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது கத்தோலிக்கர்களின் பிரச்சினை மட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பிரச்சினையாகும். அத்துடன் இது தேசிய பாதுகாப்பின் பிரச்சினை, எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலைத் தடுப்பது முக்கியம்," என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் இவை அனைத்தையும் மீறி, அரசாங்கம் பிரச்சினையை வேறு திசையில் திசை திருப்ப முயற்சிக்கிறது என்று விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வழங்கப்பட்ட உறுதிமொழியை நாட்டில் ஒரு யதார்த்தமாக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனக்குழுக்களை தூண்டி பிரச்சினையை திசை திருப்புவதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.
கத்தோலிக்க சமூகத்தின் நம்பிக்கைகளை தகர்க்க வேண்டாம் என்று விஜித ஹேரத் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
