நிதி அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தமிழர் தரப்பு விடுத்துள்ள கோரிக்கை (VIDEO)
ஒட்டுமொத்த இலங்கையும் பொருளாதார சுமையில் சிக்கியுள்ள நிலையில் தமிழர் தரப்பு மாத்திரம் இதிலிருந்து தப்பிக்க முடியாது என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மீண்டும் பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப தென்னிலங்கை போன்று தமிழர் தரப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நிதி அதிகாரத்தை தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதாவது அரசியல் தீர்வு வரும் வரை நிதியதிகாரத்தை பகிர்ந்து புலம்பெயர் உறவுகளின் முதலீட்டுக்கும், சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி அவர்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam