பாடசாலைச் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பில் சீனா - இந்தியாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்கள் தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இது தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ளார்.
சீனா இணக்கம்
அதன் பிரகாரம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்கத் தேவையான துணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகச் சீனாவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேவைப்படும் துணியில் பாதியளவு துணியை தந்துதவ சீனா இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பாடநூல்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசியை இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
