தனியார் துறையிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை-செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வர்த்தகத்துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் நாட்டின் மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20.04.2023) கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.
நாம் இரு வருடங்களுக்கு முன்னதாக இறுதியாக சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் கடுமையான நெருக்கடிகளுடன் கூடிய இரு வருடங்களின் பின்னரான சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என கணிக்க முடியாமல் இருந்திருந்தாலும் தற்போது நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய பாதைக்குள் பிரவேசித்துள்ளோம்.